திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
அதனைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத ஆசீர்வாதம் முழங்கத் தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
















