மதுரையில் உள்ள மத்திய அரசின் ஆதார் சேவை மையத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய ஏராளமானோர் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.
தென்மாவட்டத்தில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை கே.கே.நகர் பகுதியில் மத்திய அரசின் கீழ் செயல்படும் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு மதுரை மட்டுமின்றி தென்மாவட்ட மக்களின் ஆதார் அட்டையில் பல்வேறு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது, பள்ளிகளில் தேர்வு தொடங்க உள்ள நிலையில், மாணவர்களின் ஆதார் அட்டையில் முகவரி உள்ளிட்டவைகளை திருத்தம் செய்யத் தென்மாவட்ட மக்கள் மதுரைக்கு படையெடுத்துள்ளனர்.
அதிகாலை முதலே ஆதார் சேவை மையத்தில் காத்திருப்பதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் ஊர்களில் ஆதார் சேவை மையம் இல்லாததால், மதுரைக்கு வரவேண்டிய சூழல் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், தமிழக அரசின் ஆதார் இ-சேவை மையங்களை மேம்படுத்த வேண்டும் என்றும், மாவட்ட வாரியாக மத்திய அரசின் ஆதார் சேவை மையங்களை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















