நடிகர் சித்தார்த்தின் அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது.
‘Rowdy And Co’ என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தை, டக்கர் படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தைத் தயாரிக்கும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம், ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த மகாராஜா மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. இந்நிலையில், ‘Rowdy And Co’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
















