கரூரில் நடந்த மாரத்தான் போட்டியில் முறையான வழிகாட்டல் இல்லாததைக் கண்டித்து போட்டியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் CII மற்றும் யங் இந்தியன்ஸ் தனியார் கூட்டமைப்பு சார்பில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
இதில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டு மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
3, 5, 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்த மாரத்தான் போட்டியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், மாரத்தான் ஒட்டப்பந்தயத்தில் முறையான வழிகாட்டல் இல்லை எனக்கூறி தெரசா கார்னர் பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து போட்டியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கரூர் – திருச்சி பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
















