பராசக்தி படத்தின் அடி அலையே பாடலின் டான்ஸ் ரிகர்சல் வீடியோ வெளியாகி உள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பராசக்தி படத்தில் இருந்து அடி அலையே எனும் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வரும் நிலையில் சிவகார்த்திகேயன்- ஸ்ரீலீலா ஆகியோர் இந்தப் பாடலுக்கு ரிகர்சல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















