திருச்சி மாவட்டம், துறையூர் அருகே செம்புளிச்சம்பட்டி அரசுப் பழங்குடி மாணவர்களுக்கான உண்டு உறைவிட பள்ளியில், பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தப் பள்ளியில் தற்போது 51 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களுக்குக் குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி முற்றிலும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
இதனால், எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படலாம் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே, பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக அகற்றி, புதிய தொட்டியை அமைத்துத் தர வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ள்னனர்.
















