ஒழுங்கமைக்கப்பட்ட வலுவான இந்துச் சமுதாயத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ்-ன் பணி என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு ஒசகெரேஹள்ளியில் உள்ள பி.இ.எஸ் பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நுாற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் தென் மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்து 200 பிரமுகர்களும், பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும் பங்கேற்றனர். இதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய மோகன் பாகவத், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்யப்பட வேண்டும் என்று கூறிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பதிலடி கொடுத்தார்.
அதன்படி, ஆர்எஸ்எஸ் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என மோகன் பாகவத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், முழு இந்து சமுதாயத்தையும் ஒழுங்கமைப்பதே ஆர்எஸ்எஸ்-ன் பணி எனக் கூறிய மோகன் பாகவத், அவ்வாறு ஒழுங்கமைக்கப்படும் சமூகம் உலகிற்கு தர்ம அறிவைப் பரப்பும் ஒரு வளமான மற்றும் வலுவான பாரதத்தை உருவாக்குவார்கள் எனவும் கூறினார்.
















