சென்னை தி.நகரில் சட்டவிரோதமாகச் செயல்படும் சூதாட்ட கிளப்களில் ஏராளமானோர் பணத்தை இழந்துள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை தி.நகர் பகுதியில் சட்டவிரோதமாக ஏராளமான சூதாட்ட கிளப்புகள் செயல்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
தி.நகர் நரசிம்மன் சாலையில் வெங்கட், ராம் ஆகியோர் சட்டவிரோதமாகச் சூதாட்ட கிளப்பை நடத்தி வருவதாகவும், இதில், லட்சக்கணக்கான ரூபாய் வைத்துச் சூதாட்டம் நடத்தப்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பணத்தை வைத்துச் சூதாட்டம் நடத்தினால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்பதால் டோக்கனை வைத்துச் சூதாட்டம் நடைபெறுவதாகவும் கூறியுள்ளனர்.
சூதாட்டத்தில் வெற்றி பெறுவோருக்கு ஆன்லைன் வழியாகப் பணம்கொடுக்கப்படுவதாகவும், காவல்துறையின் அனுமதியுடன் சூதாட்டம் நடைபெறுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
















