தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜூபிளி ஹில்ஸ் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி இயக்குநர் ராஜமௌலி தனது வாக்கினை செலுத்தினார்.
கடந்த ஜூனில் பிஆர்ஆஸ் எம்எல்ஏ மகந்தி கோபிநாத் மாரடைப்பால் இறந்ததால் ஜூபிலி ஹில்ஸ் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி, வி. நவீன் யாதவை வேட்பாளராக அறிவித்தது. எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ்., மறைந்த எம்.எல்.ஏ.வின் மனைவி மகந்தி சுனிதாவை நிறுத்தியது.
இடைத்தேர்தலையொட்டி பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கினை செலுத்தினர். ஷேக்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் பிரபல தெலுங்கு சினிமா இயக்குநர் ராஜமௌலி தனது குடும்பத்தினருடன் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
















