சென்னை டிஜிபி அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் ஸ்டீல் பட்டறை நடத்தி வருபவர் பாஸ்கர். இவர் தனது மனைவியுடன் ஆர்.கே.சாலையில் உள்ள உணவகத்தில் உணவு அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். டிஜிபி அலுவலகம் அருகே சென்றபோது பின்னால் வந்துகொண்டிருந்த நபர், பாஸ்கரின் மனைவி மலர்கொடி அணிந்திருந்த செயினை அறுக்க முயன்றுள்ளார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்த நிலையில், கணவன் – மனைவி இருவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட முயன்ற ராமதாஸ் என்ற நபரை கைது செய்தனர்.
















