லெனின் பாண்டியன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் நடிகர் சிவாஜியின் பேரன் தர்ஷன் கணேசன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றார்.
சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன் கணேசனை வைத்து சத்ய ஜோதி பிலிம்ஸ் லெனின் பாண்டியன் என்ற படத்தைத் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் கங்கை அமரன், ரோஜா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தை புதுமுக இயக்குனர் பாலசந்திரன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் தர்ஷன் கணேசன் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து ஆசி பெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
















