தைவானில் வெளுத்து வாங்கிய கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரால் மக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர்.
கரையை கடந்த ஃபங்-வோங் புயல் எதிரொலியாகத் தைவானிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாகப் பார்க்கும் இடமெல்லம் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிப்பதோடு ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இதனால் அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாமல் மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.
















