திருச்சியில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லால்குடி நகர் பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஜெயராணி தனியார் மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
6 ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஜெயராணிக்கு கடந்த 3 ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது இறப்பிற்கு மருத்துவமனை நிர்வாகமே காரணமென கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மருத்துவமனை நிர்வாகம் தவறான சிகிச்சை அளித்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
















