சீனாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் 58 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த பெண் பிரிட்டனில் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவை சேர்ந்த ஜிமின் கியான் என்ற 47 வயதான பெண் பிட்காயின் மோசடியில் ஈடுபட்டதாகச் சீனாவை சேர்ந்த பெண் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார்.
கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சியில் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த மோசடியில் மூளையாகச் செயல்பட்ட ஜிமின் கியான், சுமார் 58 ஆயிரம் கோடி ரூபாயை பிரிட்டன் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து ஜிமின் கியானை அதிரடியாகக் கைது செய்த இங்கிலாந்து போலீசார் அவரிடம் இருந்து 61 ஆயிரம் பிட்காயின்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பான வழக்கு லண்டனில் உள்ள சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தால் விசாரணைக்கு வந்தபோது ஜிமின் கியானுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
















