உத்தரப்பிரதேசத்தில் கணவரின் காரை மனைவி சுத்தியலால் உடைத்த சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.
பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் தரம்வீரிடம் குடும்பச் செலவிற்கு பணம் கேட்டதாகத் தெரிகிறது. அதற்குக் கணவர் மறுத்ததால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த மனைவி, கையில் சுத்தியலுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர், பழுது நீக்கும் கடையில் நிறுத்தி வைக்கப்படிருந்த தன் கணவரின் காரின் கண்ணாடிகளைச் சுத்தியலால் அடித்து நொறுக்கி, தனது கைபேசியில் அதனைப் பதிவு செய்துள்ளார்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தரம்வீரின் மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
















