ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் இருசக்கர வாகன விற்பனை கடை முன் குப்பைகளைக் கொட்டிய நகராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.
அருண்குமார் என்பவருக்குச் சொந்தமான கடை முன்பு, நகராட்சி அதிகாரி ஒருவரின் உத்தரவின்பேரில், தூய்மை பணியாளர்கள், குப்பைகளைக் கொட்டியதாகவும் இது குறித்து கேட்டபோது நகராட்சி நிர்வாகம் சரிவரப் பதிலளிக்கவில்லை எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
















