இலங்கையின் குருநாகல பகுதியில் முதலையிடம் சிக்கிய குட்டியைக் காப்பாற்ற ஆற்றுக்குள் இறங்கி தாய் யானை நடத்திய பாசப் போராட்டம் காண்போரை கண்கலங்க செய்தது.
குருநாகல பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரம் யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்த நிலையில், திடீரென ஆற்றிலிருந்து வந்த முதலை, கூட்டத்தில் இருந்த ஒரு குட்டியை பிடித்து இழுத்து சென்றது.
இதனைக் கண்ட தாய் யானை, தனது குட்டியை மீட்கும் நோக்குடன் உடனடியாக ஆற்றுக்குள் இறங்கி கடும் போராட்டத்தைத் தொடங்கியது.
முதலையின் பிடியில் சிக்கியிருந்த குட்டியை மீட்பதற்காக யானை தீவிரமாக முயன்றும், தாய் யானையால் துரதிருஷ்டவசமாகக் குட்டியை மீட்க முடியவில்லை.
இந்நிலையில், ஆற்றில் இறங்கி, ஆபத்தை எதிர்கொண்டு, தன் குட்டிக்காகத் தாய் யானை பாசப்போராட்டம் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாக வைரலாகி வருகிறது.
















