திண்டுக்கல் அருகே அமைச்சர் வருகையை ஒட்டிப் பள்ளியின் நுழைவாயில் முன்பு இருந்த கழிவுநீர் வாய்க்காலை பேரூராட்சி நிர்வாகம் பச்சை துணியைக் கட்டி மறைத்த அவலம் அரங்கேறியுள்ளது.
சித்தையன் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்பு விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்க கோரி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர்.
ஆனால், பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் சரவணன் வருகையையொட்டி, பேரூராட்சி நிர்வாகத்தினர் கழிவுநீர் வாய்க்காலை சுற்றி பச்சை துணியால் கட்டி மறைத்த அவலம் அரங்கேறியுள்ளது.
















