திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கில், ஓடும் ரயிலில் இருந்து உருவ பொம்மையை கீழே தள்ளிவிட்டு போலீசார் மாதரி சோதனை நடத்தினர்.
பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலையில் தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரியாக சதிஷ்குமார் பணியாற்றி வந்தார். இவர் ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தின் தாடிபத்ரி அருகே ரயில்வே தண்டவாளத்தில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்டார். இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை பிடிக்க 19 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே சம்பவம் நிகழ்ந்த இடத்தில், ராயல்சீமா விரைவு ரயிலில் சதீஷ்குமாரின் உருவ பொம்மையை கீழே தள்ளிவிட்டு போலீசார் சோதனை நடத்தினர். இதனிடையே சதிஷ்குமார் உயிரிழக்கும் முன், தனது மனைவிக்கு “சற்று அசவுகரியமாக உணருகிறேன்” என்று குறுந்தகவல் அனுப்பி இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருப்பதி கோயிலில் 100 கோடி ரூபாய் காணிக்கை திருட்டு நடைபெற்ற வழக்கில் சதிஷ்குமார் விசாரணை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
















