மன்னிப்பு கேட்ட போதிலும் பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
கடந்த 2021-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான ஒரு ஆவண படத்தை, லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும் பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டது. அதில் டிரம்ப் ஆற்றிய உரையை பிபிசி திருத்தி வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த புகாரில் பிபிசி செய்தி நிறுவனத்தின் இயக்குநர் டிம் டேவி, செய்திப்பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்தனர். அந்நிறுவனத்தின் தரப்பிலும் மன்னிப்பு கேட்கப்பட்டது. இருப்பினும் பிபிசி நிறுவனத்தின் மீது 5 பில்லியன் டாலர்கள் வரை நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரவுள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
















