பொள்ளாச்சி அருகே Maths Magic Square அமைத்துத் தனியார் பள்ளி மாணவர்கள் உலக சாதனை படைத்தனர்.
கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், மாணவர்களின் கணித திறமையை உலகளவில் வெளிப்படுத்தும் வகையில் 105 மாணவர்கள் பங்கேற்று, 49 × 49 மேக்ஸ் மேஜிக் ஸ்கொயர் (Maths Magic Square) அமைக்கும் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது 49 வரிசை மற்றும் 49 நெடுவரிசை அடிப்படையில் 2,401 கட்டங்களை அமைத்தனர்.
எந்த வரிசையிலும் எண்களைக் கூட்டினாலும் 58 ஆயிரத்து 849 என்ற ஒரே விடை கிடைக்கும் வகையில் மேஜிக் ஸ்கொயர் வடிவமைத்துச் சாதனை படைத்தனர்.
















