கனமழை காரணமாகக் காஞ்சிபுரம் அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதலாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 600 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் மழையின் அளவு அதிகரித்ததால் ஏரிக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்தது.
இதனால் ஏரியின் நீர்மட்டம் 21.39 அடியாக உயர்ந்த நிலையில் 100 கன அடி நீர்வரத்தும் அதிகரித்தது, எனவே ஏரியின் கரைகள் மற்றும் மதகுகளின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 1200 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில் ஏரியின் நீர்வரத்து மற்றும் நீர் திறப்பை தொடர்ந்து கண்காணித்து வரும் அதிகாரிகள் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மதகுகள் வழியாகத் திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.
















