காசாவில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.
இரண்டு வருட போரினால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் பேரழிவிற்குள்ளான உள்கட்டமைப்புகளைச் சமாளிக்கப் போராடும் காசாவில் மழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக கான் யூனிஸில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கூடாரங்கள் அமைத்துத் தங்கியிருந்த மக்கள் செய்வதறியாது தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
















