சவுதி அரேபியாவில் பெய்த ஆலங்கட்டி மழை பனி பொழிந்தது போல் காட்சியளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
மதீனா மாகாணத்தில் உள்ள அல்-மஹத்தின் அல்-அம்க் பகுதியில் ஆலங்கட்டி மழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக அங்குள்ள பகுதி முழுவதும் பனியால் போர்த்தி காணப்படுவது போல் உள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியுள்ளது.
















