கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உயிரிழந்த தந்தையை அடக்கம் செய்யப் பணம் இல்லாததால் கிராம மக்கள் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணனுக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ள நிலையில் அவரின் மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
கூலி வேலை செய்து குழந்தைகளை வளர்த்த கமலக்கண்ணன் சிறுநீரக பிரச்னை காரணமாக அவதி பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
தந்தையின் உடலை அடக்கம் செய்யப் பணம் இல்லாமல் தவித்த மகனுக்கும் மகள்களுக்கும் அப்பகுதி மக்கள் ஒன்றாக இணைந்து பணம் திரட்டி உதவினர்.
பின்னர் கமலக்கண்ணனின் உடலை அடக்கம் செய்த கிராம மக்கள் 4 பேருக்குக்ம் உதவ அரசு முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
















