வாணியம்பாடி அருகே பள்ளிவாசலில் குரான் பயில வந்த மாணவர்களை ஆசிரியர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பஷீராபாத் பகுதியில் உள்ள மதராஸ பள்ளி வாசலில் ஏராளமான மாணவ, மாணவிகள் மாலை நேரத்தில் குரான் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் பள்ளி வாசலில் குரான் கற்க வந்த மாணவர்களை, குரான் கற்பிக்கும் ஆசிரியர் சரமாரியாகத் தாக்கியதுடன், மாணவரைத் தூக்கி வீசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ வைரலான நிலையில், சம்பவம்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















