கனமழை காரணமாகப் புதுச்சேரியிலும், தமிழகத்தில் சில மாவட்டங்களிலும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகத் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்தக் கனமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாகப் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
இதே போலத் தமிழகத்தில் கடலூர் மாவட்டத்திலும், விழுப்புரம் மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் பாதுகாப்பாக வீடுகளிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















