வங்கதேச தலைநகர் டாக்காவில் முன்னாள் அதிபரும், ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லம் முன்பு ராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஷேக் ஹசீனாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக்காரர்கள், அந்த இடத்தில் கால்பந்து மைதானம் கட்ட வேண்டும் என்றும், எனவே கட்டடத்தை முற்றிலுமாக இடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் பாதுகாப்புப் படையினர் மீது நேற்று கற்களை வீசி அவர்கள் தாக்குதல் நடத்தினர். எனவே பாதுகாப்பு கருதி கூடுதல் ராணுவத்தினரும், போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
















