தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதர் கோயிலில், கார்த்திகை சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
விஸ்வநாதர், வேதாந்த நாயகி மற்றும் நந்தி பகவானுக்கு மஞ்சள், திரவியம், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் என 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
















