காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் டிசம்பர் 6ம் தேதி தங்கத்தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தேர் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து, தேர் செய்யும் பணிக்காக ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்நிலையில், 25 அடி உயரம், 10 அடி அகலம், 13 அடி நீளத்திலும் ஆயிரத்து 600 கிலோ எடையிலும் தங்கத்தேர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் 6ஆம் தேதி வெள்ளோட்டம் நடைபெறும் என்றும் ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், டிசம்பர் 8ஆம் தேதி கும்பாபிஷேக விழா முடிந்தவுடன் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
















