ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதற்கு எதிராகத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இது தொடர்பான விசாரணையின்போது, விரிவான விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்றியது சரியல்ல என்ற தமிழக அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றது.
அதன்படி அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது எனக் கூறிய உச்சநீதிமன்றம், சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு இடைக்கால தடைவிதித்தது.
உயர்நீதிமன்ற ஆணைக்கு இடைக்கால தடை விதித்தால் வழக்கு காலாவதி ஆகிவிடும் என ஆம்ஸ்ட்ராங் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட உச்சநீதிமன்றம், விரிவான ஆய்வுக்குப் பின்னரே இடைக்கால தடையை விதித்திருக்கிறோம் எனவும் தெளிவுபடுத்தியது.
















