பாபா சித்திக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அன்மோல் பிஷ்னோயை 11 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ-விற்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தி அழைத்து வரப்பட்ட அன்மோல் பிஷ்னோயை, டெல்லி விமான நிலையத்தில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதனையடுத்து, அன்மோல் பிஷ்னோயை பலத்த பாதுகாப்புடன் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
பின்னர், அன்மோல் பிஷ்னோயிடம் விசாரணை நடத்த 15 நாட்கள் என்ஐஏ தரப்பில் அனுமதி கோரப்பட்டது.
இந்நிலையில், 11 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
















