ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே சுடுகாட்டுக்கு செல்லச் சாலை வசதி இல்லாததால் வனப்பகுதி வழியாகச் செல்வதாகப் பழங்குடியின மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தாளவாடி அடுத்த பழைய ஆசனூர் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுடுகாட்டிற்கு பாதை இல்லாததால், வனப்பகுதி வழியாகச் சடலத்தை எடுத்துச் செல்வதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
மழை காலங்களில் இந்தப் பாதையில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாகக் காணப்படுவதால் சடலத்தை எடுத்துச் செல்லும்போது சிரமங்களை சந்திப்பதாகவும் கூறியுள்ளனர்.
சுடுகாட்டுக்கு முறையான சாலை வசதி கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
















