ராணிப்பேட்டையில் காயமடைந்த பள்ளி மாணவனுக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் 3 மணி நேரம் காத்திருக்க வைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி விடுதியில் தினேஷ் என்ற மாணவர், தங்கி படித்து வருகிறார். இவருக்குக் கால் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது பெற்றோர் அல்லது ஆசிரியருடன் வருமாறு கூறி மாணவரை 3 மணி நேரம் காத்திருக்க வைத்ததாகச் சக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.
















