குற்ற வழக்கில் ஆஜராகாத மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் மீது பிடிவாரண்ட் பிறப்பித்து வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பேரூராட்சி பகுதியில் மின்பேட்டரி காணாமல் போன வழக்கில் 6 பேர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் 2011ஆம் ஆண்டு வள்ளியூர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சுந்தரேசன், குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தார்.
கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கில், சாட்சியாக ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பப்பட்ட போதிலும், தற்போது டிஎஸ்பியாகப் பணியாற்றும் சுந்தரேசன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து நீதிபதி, மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
















