சென்னையில் அதிமுக வியூக வகுப்பாளர்களை செய்யாத குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்டு கையொப்பமிடுமாறு காவல்துறையினர் வற்புறுத்துவதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரும்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில இணைச் செயலாளர் பாலமுருகன், அதிமுகவின் வியூக வகுப்பாளர்களாக உள்ள ஹரி, சாய் ஆகியோர் அவரது அலுவலகத்திலேயே காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறியுள்ளார்.
எந்தக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்ற விவரம் தெரியாமல் நள்ளிரவு ஒரு மணிவரையில் அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் அங்கும் இங்கும் அலைந்ததாகவும், இரண்டு மணி அளவில் அவர் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரிந்ததாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், விசாரணைக்காக அழைத்துச் செல்லும் முறையான சட்ட நடவடிக்கைகள் எதையுமே காவல்துறையினர் மேற்கொள்ளவில்லை என்றும் பாலமுருகன் குற்றம் சாட்டினார்.
















