மதுரையில் திமுகவின் விளம்பர ஆர்ப்பாட்டத்தினால் மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், பழங்காநத்தம் பகுதியில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததாகத் தவறான காரணத்தை கூறியும், நிர்வாகக் குறைபாட்டை திசை திரும்பும் வகையில் மத்திய அரசுக்கு எதிராகத் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுகவினரின் போராட்டத்தினால் மதுரை – திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போராட்டத்திற்கு வந்த திமுகவினர் ஆங்காங்கே சாலைகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், இதனால், பள்ளி, கல்லூரிக்குச் சென்ற மாணவர்கள் கடும் இன்னலுக்கு ஆளானதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
















