மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் மற்றும் பத்திரப்பதிவு உள்ளிட்டவற்றில் அமைச்சர் மனோதங்கராஜ் ஊழல் செய்ததாகவும், எனவே அவரைப் பதவியை விட்டு நீக்க வேண்டும் எனவும் அதிமுக அமைப்புச் செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, அமைச்சர் மனோதங்கராஜ் அவரின் உறவினர் பெயரில் சட்டவிரோதமாக 100 கோடி ரூபாய் மதிப்பில் பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு அவரது பதவியை தமிழக அரசு பறிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
















