நாகர்கோவில் அருகே வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தொல்லவிளை பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவர் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில், அவரது மனைவி பிரதிபா தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக உள்ளார்.
இரு குழந்தைகளுடன் பிரதிபா வீட்டில் வசித்து வரும் நிலையில், அவரது எதிர் வீட்டில் வசிக்கும் காட்பிரே என்பவரது வளர்ப்பு நாள் பிரதிபாவின் 10 வயது மகளை துரத்தி சென்று கடித்துள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பிரதிபா மற்றும் அவரது உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மேலும், சிறுமியை நாய் கடித்தது தொடர்பாக கேட்ட பிரதிபாவுக்கு காட் பிரோ கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பிரதிபா அளித்த புகாரின் அடிப்படையில் காட்பிரோ மற்றும் அவரது தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















