ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம் காரணமாகத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் நங்கூரம் அறுந்து கரை ஒதுங்கின.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் காரணமாக, ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இந்த நிலையில், மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள், நங்கூரம் அறுந்து சேரன் கோட்டை பகுதியில் கரை ஒதுங்கின. இதனால் அவதியடைந்த மீனவர்கள், கரை ஒதுங்கிய படகுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















