ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு சம்பவத்தில் 128 பேர் உயிரிழந்ததற்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
சீனாவின் தன்னாட்சி பெற்ற பகுதியான ஹாங்காங்கின் தாய் பொ நகரில் வாங் பெக் கோர்ட்டு காம்பிளஸ் பகுதியில் கடந்த 26ம் தேதி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
2 நாட்களாக எரிந்து வந்த தீ, பின்னர் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தக் கோர விபத்தில் 128 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து அரசு அலுவலங்களில் அந்நாட்டின் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
















