சென்னை அருகே தவெக நிர்வாகியை கொடூரமாகத் தாக்கியதாகத் திமுகவினர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தவெகவில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் வகையில் வாழ்த்துச் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். இதன் காரணமாகத் திமுகவினர் மற்றும் தவெகவினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தவெக நிர்வாகி ரவிச்சந்திரனை ஓடஓட விரட்டித் திமுக ஒன்றிய சேர்மனின் கணவர், திமுக கவுன்சிலர் உள்ளிட்டோர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
















