உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளதாகக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு கல்வி நிறுவனமான FDDI-யின் பட்டமளிப்பு விழா டெல்லியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய திரவுபதி முர்மு, வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலணி வணிகத்திற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளதாகக் கூறினார்.
உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளதாகக் கூறிய குடியரசுத் தலைவர், நமது ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க, காலணி வணிகத்தை இன்னும் விரிவுபடுத்த வேண்டும் என்றார்.
















