ஜப்பானில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பின் கலைப் படைப்புகளின் கண்காட்சி தொடங்கி உள்ள நிலையில் ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், பிளாட்டூன், க்ரை-பேபி, டெட் மேன் எனப் பல படங்களில் நடித்துள்ளார். பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் பட வரிசையில் நடித்த ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரம் மூலம் ஜானி டெப் உலகம் முழுவதும் பிரபலமானார்.
திரைத்துறை மட்டுமின்றி கலைப் படைப்புகளிலும் அசத்தும் ஜானி டெப், பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளது.
இந்நிலையில் ‘எ பன்ச் ஆஃப் ஸ்டஃப்’ (A Bunch of Stuff) என்ற பெயரில் அவரின் ஓவியங்கள் மற்றும் கலைப்பொருட்களின் தனிப்பட்ட கண்காட்சி ஜப்பானின் டோக்கியோவில் திறக்கப்பட்டுள்ளது.
திரைப்படத் துறையில் மட்டுமின்றி, கலை உலகிலும் தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தும் டெப்பின் ஓவியங்கள் மற்றும் தனிப்பட்ட கலைப்படைப்புகளைப் பார்வையாளர்களுக்குக் காண அரிய வாய்ப்பாக இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. இதனை அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
















