காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தங்கப்பல்லி சிலையைத் திருட நடந்த முயற்சிகுறித்து காவல்துறை பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள தங்கப்பல்லி சிலையைத் திருட முயற்சி நடந்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதன் விசாரணையில் ஆஜரான காவல்துறை தரப்பு, சிலை திருட்டு ஏதும் நடைபெறாததால் புகார் முடித்து வைக்கப்பட்டதாகத் தெரிவித்தது.
இதையடுத்து, இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
















