அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியமாட்டோம் என வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கூறியுள்ளார்.
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்த, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஊக்குவிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
இதையடுத்து வெனிசுலா அருகே கரீபியன் பகுதியில் அமெரிக்கா, கடற்படையை பெரும் அளவில் குவித்து வருகிறது.
இதனிடையே வெனிசுலா அதிபரிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப், உயிரோடு இருக்க வேண்டுமானால் குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டினார்.
இந்நிலையில் தலைநகர் கராகசில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற மதுரோ, ஒரு அடிமையின் அமைதியையோ, காலனித்துவ அமைதியையோ வெனிசுலா விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.
















