தேர்தல் விதிகளை மீறியதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மீது பதியப்பட்ட வழக்கு அரசு தரப்பில் நிரூபிக்கப்படாததால் அவரை விடுவித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோவையில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார். அப்போது கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக அவர் சென்றிருந்தார்.
தொடர்ந்து கோயிலில் பக்தர்களிடம் தாமரை சின்னத்தில் வாக்களிக்க கோரியதாகவும், அதன் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், அரசு தரப்பில் புகார் நிரூபிக்கப்படாததால் வழக்கில் இருந்து கோவை நீதிமன்றம் அவரை விடுவித்தது.
















