அமெரிக்காவில், ஹெபடைடிஸ் பி தடுப்பூசியை பிறந்த குழந்தைகளுக்குச் செலுத்துவது கட்டாயம் இல்லை என அந்நாட்டு தடுப்பூசி ஆலோசனை குழு தெரிவித்துள்ளது.
கல்லீரலைத் தாக்கும் ஹெபடைடிஸ் கிருமிகளை தடுக்க உலக சுகாதார மையத்தால் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த தடுப்பூசி குழந்தை பிறந்து 72 மணி நேரத்துக்குள் செலுத்தப்படும். இந்நிலையில் இந்தத் தடுப்பூசியை இனி அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குச் செலுத்துவது கட்டாயம் இல்லை என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
இந்த தடுப்பூசியை செலுத்த விரும்புவோருக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
















