சிங்கப்பூரில் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி இறுதியில் இருந்து விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சிங்கப்பூருக்குச் செல்ல விரும்பும் பயணிகள், விமான டிக்கெட் எடுப்பதற்கு முன், ஐசிஏ தளத்தின் வழியாக நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், ஐசிஏ நேரடியாக அனுமதி அளிக்கும் வரை பயணத்தை திட்டமிடக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிகளை கடைபிடிக்காத விமான நிறுவனங்களுக்கு 7 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















