வங்கதேசத்தில், இந்து மதத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரும், அவரது மனைவியும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தின் ரங்பூர் மாவட்டம் உத்தர் ரஹிமாபூரில், இந்து மதத்தைச் சேர்ந்த அந்நாட்டு சுதந்திரப் போராட்ட வீரர் ஜோகேஷ் சந்திரராய், தனது மனைவியுடன் வசித்து வந்தார்.
கடந்த 10ம் தேதி வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து சென்று பார்த்தனர்.
அப்போது, இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதனையடுத்து இருவரின் உடல்களையும் மீட்டப் போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















